அறிமுகம்
இந்த அறக்கட்டளையை தொடங்குவதற்கு நாம் முன்னிறுத்திய அடிப்படைத்தத்துவம் தமிழில் நிகழ்நிலைக்கல்வி சுட்டும் தாழ்நிலை சமுதாயமேம்பாடு என்பதாகும். அதன் முதன்முயற்சியாக துவங்கிய பணிதான் ஆறாம் வகுப்பிலிருந்து தமிழில் பள்ளிக்கணிதம். தாழ்நிலையில் உள்ள தமிழ்ச்சமுதாயத்தில் உள்ள குழந்தைகள் அனேகமாகப்பயிலுவது அரசுப்பள்ளிகளில் தான். அரசுப்பள்ளிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் மற்றும் கிராமங்களிலும் தான் அதிகமாக இயங்கி வருகின்றன. தாழ்நிலை சமுதாய மேம்பாட்டை மனதிற்கொண்டு நாம் எடுக்கும் எந்த முயற்சியும் முழுமையாக உத்தேசித்த சமுதாய இலக்கை சென்றடைய வேண்டுமெனில் நமக்கு அந்த சமுதாய இலக்கைக்குறித்து முழுமையான புரிதல் வேண்டும்.
தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள இளம் மாணவச்சமுதாயம், இணையங்களின் தாக்கத்தாலும் நவீன திறன்பேசிகளின் பல்திறனாலும் அதிகம் பாதிக்கப்படாத ஒரு கட்டமைப்புள்ள சமுதாயமாகும். அவர்கள் எல்லோருக்கும் விளங்கும் விதத்தில் மிகத்தெளிவாக ஒரு கணிதக்கோட்பாட்டையோ அல்லது விளக்கத்தையோ எடுத்துரைப்பதற்கு காணொலியைவிட, தமிழில் அமைக்கப்பட்ட விளக்கக்காட்சிகளே சரியான ஊடகம் என தீர்மானித்து அவ்வாறே அமைக்கத்தொடங்கினோம். பின் தினமும் அயராது அவற்றை விரிவாக்கம் செய்துகொண்டிருக்கிறோம். இது பயிற்றுவிக்கும் முறையில் நல்ல ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்புகிறோம். எங்களின் இன்நற்பணி தொடரும். கணிதப்பாடங்கள் சித்திரவடிவில் அமைந்தால் மாணவர்களின் கருத்துட்கொணல் மிகைப்படும் என்பதை மனதிற்கொண்டு பாடங்களை படிப்படியாக அமைத்து பிடிஎஃப் விளக்கக்காட்சிகளாக அமைத்திருக்கிறோம். இவற்றை ஒருபக்கப்பார்வையில் காணுதல் (Single page pdf viewing) மாணவர்களின் புரிதலுக்கு மிக ஏதுவாக அமையும் என வலியுறுத்துகிறோம்.
இவ்விளக்கக்காட்சிகள், தமிழில் கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியப்பெருமக்களுக்கு உற்ற துணையாக இருந்து ஒரு உதவும் கருவியாகவும் அதே சமயம் கணிதத்தில் ஆர்வமுடைய எல்லா மாணவர்களுக்கும், உதாரணங்கள் நிறைந்த ஒரு வழிகாட்டியாகவும் அமையும் என நம்புகிறோம்.
Get In Touch
For more information regarding the content on the site, or to get in touch for any other reason:
உள்ளடக்கம்
தமிழில் கணிதப்பாடங்கள், தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனத்தின் பாடத்திட்டங்களின் படி வகைப்படுத்தப்படிருக்கின்றன. ஒவ்வொரு வகுப்பிற்குக்கீழும் இயல்கள், ஒவ்வொரு இயலுக்குக்கீழும் அத்தியாயங்கள், ஒவ்வொரு அத்தியாயத்திற்குக்கீழும் கணிதப்பாடங்கள் என எளிதில் விளங்கும் விதத்தில் ஒரு கட்டமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இணையத்தை உபயோகிக்கும் எல்லோருக்கும் இந்த எளிமையான கட்டமைப்பு ஏதுவாக அமையும் என நம்புகிறோம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு இயலும் தன்னிறைவுடைய பகுதிகளாக இருந்து அவற்றை கற்கும் ஒவ்வொருவருக்கும் அப்பகுதியில் உள்ள கணிதத்தைக்குறித்து முழுமையான புரிதலை ஏற்படுத்தும் என நம்புகிறோம்/விழைகிறோம்.
